திங்கள், 24 மே, 2010

அய்யா கலைஞருக்கு நான்கு கேள்விகள்..அய்யா கலைஞருக்கு நான்கு கேள்விகள்..


தினமும் செய்திகளில் மூச்சுக்கு முந்நூறு தடவை இவர் பெயரை கூறாத தொலைகாட்சிகள் இல்லை..

ஒரு முதல்வன் சாதாரண அரசு ஊழியன் தானே.. அதற்கு பதவிக்குரிய மரியாதையை மட்டும் தானே இருக்க வேண்டும். ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு ஏன் உருவகபடுத்த படுகிறார்கள் இங்கே.

இனி கேள்விகளுக்கு வருவோம்

௧) நீங்கள் தமிழுக்காக அப்படி என்ன வெட்டி முறித்து விட்டீர்கள் எதற்கு இத்தனை பாராட்டு விழாக்கள் ஆர்பாட்டங்கள்  ?

தமிழில் உளியின் ஓசை. பெண் சிங்கம்  படத்திற்கு கதை வசனம் எழுதினீர்களே ....இல்லை
உங்கள் தொலைகாட்சி தொடர்களுக்கு பெயர்கள் சூட்டினீர்களே அதனாலா....


இங்கே ஆயிரம் பேர் நன்றாக கவிதை எழுதுகிறார்கள் , கதை எழுதுகிறர்கள் அவர்களெல்லாம் தமிழ் வளர்க்கவில்லையா ?
௨)சரி நீங்க கஷ்டப்பட்டு உங்க பணத்தில் இருந்து இலவச தொலைகாட்சி கொடுப்பதை போலவே எல்லா ஊடகங்களும் சொல்கின்றனவே ?

தினமும் இலவச தொலைகாட்சி பெட்டி தந்தார்... ஒரு ரூபாய் அரிசி தந்தார்...
சினிமா தொழிலாளிகளுக்கு நிலம் தந்தார்...
மக்கள் பணத்தை மக்களிடம் ஒப்படைக்க எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ..

௩) இந்த ஐந்து வருடங்களில் உருப்படியாக என்னதான் வேலை செய்தீர்கள் ?

சாதாரண பொறியியல் வேலை பார்க்கும எங்களை போன்ற பாமரர்களுக்கே
செய்யும் வேலையின் அடிப்படையில் தான் பதவி உயர்வு , சம்பள உயர்வு அளிக்க படுகிறது... ஒவ்வொரு வருட ஆரம்பத்திலேயே இந்த வருடத்திற்கான  திட்ட வரையறைகளை உருவாக்கி அதை செயல் படுத்தினால் மட்டுமே வேலையில் நீடிக்க முடியும்...

இவ்வாறான நிலையில் உங்கள் அரசாங்கம் இத்தனை அரசு வூளியர்களுடன் சேர்ந்து அப்படி என்ன பெரிதாக இது வரை மெச்சிக் கொள்ளும் படியான சாதனை செய்தீர்கள் ....

ஐந்து வருடங்களில் தனியார் நிறுவனங்கள் எவ்வளவோ ஏற்றமும் இரக்கமும் காண்கின்றன,...இங்கே விலை வாசி மட்டும் தான் ஏற்றம் கண்டதே தவிர....தமிழன் வாழ்கையில் எந்த ஏற்றமும் இல்லை...

௪) வெளிநாடுகளுக்கு செல்லும் போது , அங்கு உள்ள சுற்றுச்சூழலை பார்க்கும் போது உங்கள் மனதில் உறுத்த வில்லையா ? இப்படி நம்ம நாட்டையும் மாற்றி பாக்கணும்னு ஒரு சின்ன ஆசைகூட எழவில்லையா...

உங்களுகே எப்படி எழும்.. அங்கேயும் கூட்டம் கூட்டி வாழ்த்துரை வாங்க தானேநேரம் சரியாக இருக்கும்.

நடிகர் அஜித் ஏதோ  மனதில் உள்ளதை சொன்னதை கூட உங்கள் தொலைகாட்சி அப்பட்டமாக மூடி மறைத்தது ....

மட்டமாக ஓடும் திரைப்படங்களை கூட மூன்று மதங்களுக்கு மேல் படவரிசை பத்தில் முதல் இடம் பெறுகிறது...இப்படி இருக்க எப்படி உங்கள் மேல் நம்பகத்தன்மை வரும்..?

காலம் தான் இதற்கெல்லாம் பதில் சொல்லும்.

எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் எவனோ யாகம் வளர்ப்பது போல உள்ளது இந்த செம்மொழி மாநாடு. அவனவன் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் நிலையில் இப்போ
இந்த மாநாடெல்லாம் அவசியமா ?

தமிழ் அறிஞர்களே வாருங்கள் வந்து நம் முதல்வருக்கு மிச்ச மீதி ஏதும் புகழ் பாட வார்த்தைகள் இருந்தால் பாடிவிட்டு செல்லுங்கள் .


ஒரு படித்த முதல்வன் வருவான்... அவன் முதல்வனுக்கு உரிய வேலைகளை மட்டும் பார்ப்பான் ... அரசு ஊழியர்களை வேலை பார்க்க வைப்பான். அனைத்தையும் கணினி மயம் ஆக்குவான். ஊழலை கண்காணிக்க காமிரா பொறுத்த உத்தரவிடுவான் ... தமிழ் நாட்டை மற்றொரு ஜப்பானாக  மாற்றுவான்...மதுரை மலேசியாவாக மாறும் .. சாலைகள் உயர்தர அழகு பெரும்.சென்னை சிங்கபூராக மாறும்.  சாலைகள் அனைத்தும் கச்சிதமாக சிக்னல் விளக்குகளுடன் வழி விடும். தமிழர் வாழ்க்கை பாதுகாப்பானதாக மாறும் . கோவில்கள் மேம்படுத்தப்படும் . தமிழ் மென்பொருட்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கும் ...கல்வி கணினியில் தமிழில் ஒளிரும். அந்த முதல்வன்  மகளுக்கு Twitter இல் காலை வணக்கம் சொல்வான். பொதிகை தொலைகாட்சியில் மக்கள் குறை தீர்ப்பான் .... NDTV கு பெருமையுடன் ஆங்கிலத்தில் பேட்டி தருவான் ... தமிழகத்தை எப்படி முன் மாதிரியாக உருவாக்கினோம் என BBC க்கு எடுத்துரைப்பான் . இலவசம் என்ற மாய வார்த்தை ஒழியும் .மந்திரிகள் மக்களோடு பஸ்சில் செல்வார்கள்.
இலங்கைக்கு பாலம் அமையும்...தமிழ் மொழி மாற்றம் பெரும்.. சில வார்த்தைகள் தேவை குன்றி அதிகாரத்தில் இருந்தே நீக்க வேண்டி வரும்...அந்த வார்த்தைகள் பிச்சை, வறுமை, இலவசம், லஞ்சம்...

அரசியல் ஒரு கார்பரேட் வேலை போல மாறும்.அன்று இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒழிந்துவிடும்...அன்று பாடுவோம் நாங்கள் செம்மொழியான தமிழ் மொழியாம் என்று ....


இப்பொழுதைக்கு இப்படி கனவு காண மட்டுமே முடியும் ...எல்லோரும் கடவுளை வேண்டுங்க...சீக்கிரம் தமிழனுக்கு விடியல் பிறக்க..

கருத்துகள் இல்லை: