வெள்ளி, 25 ஜூன், 2010

கலைஞரின் தற்புகழ்ச்சி தமிழ் மாநாடு பற்றி சில கேள்விகள் ?

கலைஞரின் தற்புகழ்ச்சி தமிழ் மாநாடு பற்றி சில கேள்விகள் ?


௧) நமது குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலுக்கும் செம்மொழி யான தமிழுக்கும் என்ன சம்பந்தம் ?


இது கூட சரி ...என்ன அவர் ஒரு குடியரசு தலைவர்...அதனால் மாநிலத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிக்கு அழைத்ததில் தவறு இல்லை எனலாம்...

௨) எதற்காக நமது தங்க தலைவர்...தமிழ் ஆர்வலர் உயர் திரு அப்துல் கலாம் மாநாட்டிற்கு வரவில்லை ?

௩) அரசு தரப்பில் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லைய என்ன ? 

கண்டிப்பாக அவர் அப்படி செய்து இருக்க மாட்டார். சின்ன சின்ன பொறியியல் கல்லூரிகளுக்கே சென்று மாணவர்களை சந்திக்கும் அவர் இந்த செம்மொழி மாநாட்டையா மறுத்திருப்பார் .. இதில் ஏதோ திட்டமிட்ட சதி உள்ளது. 

௪) தினமலரில் எடுத்தது ... 

(கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.
அவர் வேட்டி கட்டுகிறார்,
ஆனால், அவர் இதயம் எப்போதும்
கசங்காத புடவையோடு தான்...
அவரது கபால களஞ்சியத்தில்
ஆண் எண்ணங்களை விட,
ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.
இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை
கொடையாக தரமுடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில்
இவர் இருந்திருந்தால்,
அதியமான் ஏமாந்திருப்பான்.
அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்
இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...' என, முதல்வர் மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து, கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார். "பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி, தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி, பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்...
"சென்னைக்கு தெற்கே உள்ள
திருக்குவளையின் தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...')


யப்பப்பா எவ்வளவு நாளைக்குதான் இந்த புகழ்சிய கேட்டுகிட்டே இருக்குறது.... இதுக்கு 450 கோடி தெண்ட செலவு. 

அப்படி நல்லவராக இருந்திருந்தால் புகழ்ச்சி பாடும் கவிஞர்களை அவையிலேயே தடுத்து நிறுத்தி ...என்னை பற்றி புகழாதீர்கள் ...நம் செந்தமிழை பற்றி புகழுங்கள் என்று கூறி இருந்தால் ...நீங்கள் ஒரு உண்மையான தமிழன் என்று இந்த உலகமே புகழ்ந்திருக்கும்...

சில பாமர தனமான கேள்விகள் ..

இந்த மாநாடு ஒரு அரசு விழா தானே?  தமிழ் ஆர்வலர்களை அழைக்கலாம் தானே ? ஏன் நீங்க உங்கள் எதிர் கட்சி அம்மையார் செல்வி . ஜெயலலிதாவை அழைக்கவில்லை...வைகோவை அழைக்கவில்லை ?அப்துல் கலாமையே அழைக்காதவர்களிடம் இதையெல்லாம் எதிர்பாக்கலாமா ?    ....


சரி சரி எல்லாம் வூட்டுக்கு போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலைய பாருங்க...  
 

5 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

நானும் இதைத் தான் முன்மொழிகின்றேன்.

மக்கள் தளபதி/Navanithan/ナパニ சொன்னது…

//சரி சரி எல்லாம் வூட்டுக்கு போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலைய பாருங்க//

அதேதான்..

தமிழன்-கோபி சொன்னது…

ச.இலங்கேஸ்வரன், மக்கள் தளபதி ...

தங்கள் வருகைக்கு நன்றி...

Unknown சொன்னது…

அட... செம்மொழி மா நாட்டிலே வேறே என்னத்தய்யா எதிர் பார்த்தீங்க? அப்படி எதிர் பார்த்தீங்கன்ன அது உங்க தப்பு. நவீன கொடை வள்ளலின் தப்பில்லை..

K.KarthikaMuthukumaran சொன்னது…

தமிழினத்தின் மீதும் தமிழ்ப் பெண்கள் மீதும் மிகுந்த மதிப்பும்!?!?!? மரியாதையும்!?!?!? கொண்ட குஷ்பூ போன்றவர்கள் அலங்கரித்த மேடைக்கும் மானம் கெட்ட மாநாட்டிற்கும் கலாம் போன்ற சத்தமில்லாமல் சாதிக்கும் தமிழ் அன்பர்கள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் வராமல் இருந்ததே நல்லது.
கற்புக்கரசி கண்ணகி பாத்திரத்திற்கு வசனம் எழுதிய நமது தலைவர் அவர்கள் அம்மணியால் ஏற்பட்ட அந்த சர்ச்சைக்கும், அவர் கட்சியில் புதிதாக இணைந்தது பற்றியும் கருத்தென்ன சொன்னார் தொரியுமா? 'குஷ்பூ நினைத்ததை பேசும், செய்யும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட முற்போக்கான!!! பெண்மணி...' நெஞ்சு பொறுக்குதில்லையே நண்பரே....