வெள்ளி, 4 நவம்பர், 2011

பய லலிதாவும்..கறுப்பு நிதியும்...

ஆதங்கம் ..


ஒரு முதல்வர் என்பவர் மக்களுக்கு சேவை செய்யும் சேவகன்....வேலைக்காரன்..

இவர்கள் மக்களுக்கும் கொடுக்கும் ஒவ்வொரு வசதிக்கும் தங்கள் பெயரிலேயே விளம்பரம் செய்கின்றனர்...

அரிசியில் இருந்து ஆம்புலன்ஸ் வரை முதல்வரின் படம்...பேருந்தில் கூட அவர்களுக்கு பிடித்த நிறம்...

இவர்கள் சுய விளம்பர பைத்தியங்கள்....ஒருவர் செய்ததை மற்றொருவர் வந்து சுலபமாக அழிக்கிறார்...

என்னமோ அவர்கள் சொந்த காசில் வங்கியதை போல அவர்கள் பெயரில் வைப்பதும், கட்டிடங்களை மாற்றுவதும் ....நம்மை போன்ற நடுத்தர மக்கள் ...தவறாமல் வரிகட்டுபவர்கள்... ஒவ்வொருமுறையும்இந்த முறையாவதுமுதல்வருக்கு நல்ல புத்தி வந்து கொஞ்சமாக பணத்தை சுருட்டிக்கொண்டு எதாவது உருப்படியான திட்டங்களை கொண்டுவர மாட்டார்களா என ஏமாந்து போகின்றனர்..


 வடிவேலு ஒரு படத்தில் கதை சொல்லுவர்...ஒரு ஊருல இழவு காத்த கிளி இழவு காத்த கிளின்னு ஒன்னு இருந்துச்சாம்...அந்த கிளிபயபுள்ள இந்த காய் பழுத்து பழமான பிறகு சாப்பிடலாம்னு ....

ஆனா அந்த பழம் ஒரு நாள் பழுத்து பஞ்சா பறந்துடுச்சாம்... இப்போ என்ன சொல்ல வர்றேன்னா நம்ம எல்லோரும் அந்த கிளிப்பயபுள்ள மாதிரி ஏமாந்து போயிட்டோம்...உழைக்காத காசு பிச்சை எடுப்பதை விட மிக கேவலமானது...மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவன் மிக கேவலமான பிறவி...ஒவ்வொரு கவுன்சிலரும் பல லட்ச ரூபாய் முதலீட்டில் பதவியை கைப்பற்ற யார் காரணம்...?தலைமை சரி இல்லை என்பதை தவிர எது காரணமாக இருக்க முடியும் ?


கொஞ்சமாவது மானம் ரோஷம் ...மனிதாபிமானம் இருந்தால் முதல்வன் படத்தில் வருவது போல ஒரு நல்லாட்சியை கொடுக்கலாம்...மக்கள் ஆதரவை தவிர வேறு எது வேண்டும் ? சாகும் போது ஒரு பைசா கூட வராது என்பதை உணர்ந்தால்

இவர்கள் தமிழகத்தை சிங்கபூர் ஆக்கி இருப்பார்கள்...அது இந்த ஜென்மத்தில் நடக்காது....ரெண்டு கட்சியின் தலைவர்களுக்கும் மன நிலை பாதிப்பில் இருகிறார்கள் என்பதே உண்மை...அவர்களாக மூப்படைந்து சாகும் வரை தமிழகத்துக்கு விடிவுகாலம் இல்லை...

3 கருத்துகள்:

பாலா சொன்னது…

நீங்க சொல்வது சரிதான். சிலர் வெக்கமில்லாமல், முதல்வர் கருணையோடு உதவித்தொகை வழங்கினார் என்று சொல்வார்கள். நம்ம காசை நமக்கு கொடுப்பதற்கு என்னத்துக்கு கருணை?

தமிழன்-கோபி சொன்னது…

நன்றி பாலா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரியாச் சொன்னீங்க... முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். இனி தொடர்வேன். நன்றி !